முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹா கடந்த 13ஆம் தேதி(மார்ச் 13) மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் எட்டுக் கட்டமாக நடைபெறவுள்ளது.
இந்தச்சூழலில், மூத்த பாஜக தலைவர் ஒருவர் மம்தாவுடன் சேர்ந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக அமைந்தது. இந்நிலையில், திரிணாமுல் கட்சியின் துணைத் தலைவராக யஷ்வந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் சுபராத்தா பக்ஷி வெளியிட்டுள்ளார். அக்கட்சியில் மம்தாவுக்கு அடுத்த இடத்தை தற்போது யஷ்வந்த் சின்ஹா பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: இயற்கை விவசாயத்தில் ஸ்ட்ராபெரி பயிரிட்டு கலக்கும் விவசாயி!