ETV Bharat / bharat

15 வயது சிறுவனை வேட்டையாடிய புலி - உத்தரபிரதேசத்தில் தொடரும் உயிரிழப்புகள் - துத்வா தாங்கல் மண்டல டிஎப்ஓ சுந்தர்ரேஷா

உத்தரப்பிரதேச மாநிலம் துத்வா பகுதிகளில் சமீப காலமாக புலிகளின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் நேற்று (செப்-19) 15 வயது சிறுவன் ஒருவன் புலி தாக்கியதில் உயிரிழந்தான்.

15 வயது சிறுவனை கொன்று தின்ற புலி -   உத்தரபிரதேசத்தில் தொடரும் உயிரிழப்புகள்

author img

By

Published : Sep 20, 2022, 8:21 PM IST

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலம் மஜ்ரா புரா மாவட்டத்தில் 15 வயது சிறுவனை புலி ஒன்று கொன்று தின்றுள்ளது. அந்த சிறுவனின் உடல் வயலில் பாதி உண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறந்த சிறுவன் அக்கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா சவுகானின் மகன் பப்பு சவுகான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்று காலை அச்சிறுவன் கால்நடைகளுக்கு தீவனம் எடுப்பதற்காக வயலுக்கு சென்றுள்ளான். மாலை 5 மணி ஆகியும் வீடு திரும்பததால் சந்தேகமடைந்து வயலுக்கு சென்று தேடிய போது சிறுவனின் உடல் பாதி உண்ட நிலையில் கரும்பு தோட்டத்தில் கிடந்தது.

இதனையடுத்து போலீசார் மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பராஸ் பூர்வா கிராமம் மற்றும் மஞ்ச்ரா கிழக்கு , அதன் சுற்று வட்டார பகுதிகளில் புலி பயம் தலை தூக்கியுள்ளது. இப்பகுதிகளில் கடந்த ஒரு சில ஆண்டுகளில் சுமார் 24 பேர் புலி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து துத்வா தாங்கல் மண்டல டி.எப்.ஓ., சுந்தர்ரேஷா கூறுகையில் வனப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், புலிகள் வெளியேறி கிராம பகுதியில் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் புலிகள் எளிமையாக கரும்பு வயல்களில் உள்ள உயரமான இடங்களுக்கு வந்து விடுகின்றன எனக் கூறினார்.

எனவே அங்குள்ள வயல்வெளிகளுக்கு தனியாக செல்லாமல், கூட்டமாக செல்ல வேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அப்பகுதி முழுவதும் வனத்துறை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் அப்பகுதியினர் வனத்துறை மீது அதிருப்தியில் உள்ளனர்.

இதையும் படிங்க:நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 4 மடங்கு அதிகமாக திறக்கப்பட்ட காவிரி நீர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.