மும்பை: மும்பை தாராவியில் வசித்து வந்த 26 வயதான கபடி வீரர் விமல்ராஜ், நேற்றிரவு(ஜூலை 23) சிலரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். ங
இதனிடையே குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, தாராவி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சிசிடிவி காட்சிகள் மற்றும் நேரில் பார்த்தவர்கள் கூறிய தகவலின்படி, மல்லேஷ் சிட்டகண்டி (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்தில் போலீசார் மல்லேஷை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து மேலும் இருவரையும் கைது செய்தனர்.
விமல்ராஜ் வீட்டருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாய்த்தகராறில், மல்லேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இந்த கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கொன்ற பெற்றோர்