காந்தி நகர்: குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் உதானாவில் பெண் ஒருவரை குடும்பத்தினரே 22 ஆண்டுகளாக வீட்டிற்குள் பூட்டி வைத்திருப்பதாக தனியார் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் கங்கபா அறக்கட்டளையின் உறுப்பினர் ஜலாபிபன் ஜோனானி, சம்பவயிடத்திற்கு விரைந்து பெண்ணை மீட்டார்.
இதுகுறித்து ஜோனானி கூறுகையில், "மீட்கப்பட்ட பெண்ணின் பெயர் மனிஷாபேன் (வயது 50) (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். அவரசு கணவர் மற்றும் இரு மகன்கள் மனிஷாபேன் சாப்பாடு கொடுக்கும்போதும், குளிப்பாட்டும் போதுகூட தாக்குவதாக தெரிவிக்கின்றனர். மனிஷாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் மருத்துமனையில் சேர்க்க உள்ளோம். சிகிச்சைப்பிறகு அவரது மனநலம் குறித்து பரிசோதனை செய்யப்படும்" என்றார்.
இதையும் படிங்க:பதைபதைக்கும் வீடியோ: மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து குதித்த இளம்பெண்