ETV Bharat / bharat

கட்டுப்பாடுகளை விதிக்க காரணம் உயிர்களை காப்பாற்றுவதே - உத்தவ் தாக்கரே

author img

By

Published : Apr 14, 2021, 8:05 AM IST

நீங்கள் என்னை உங்கள் குடும்பத்தின் ஒருவராகக் கருதுகிறீர்கள். உங்கள் நலனுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். இந்தக் கட்டுப்பாடுகளை விதிக்க ஒரே காரணம் உயிர்களைக் காப்பாற்றுவதே. தயவுசெய்து இதைப் புரிந்துகொண்டு ஒத்துழைக்கவும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று (ஏப். 14) முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே கரோனா பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில்தான் அதிகமாக உள்ளது. தினசரி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுவருகிறார்கள்.

உங்கள் நலனுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்
உங்கள் நலனுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்

இதன் காரணமாக மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனைகள் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்றாலும் பாதிப்பு குறைந்தபாடில்லை.

உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்

உயிர்களை காப்பாற்றுவதே முக்கியம்
உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்

இதையடுத்து மக்களிடம் சமூக ஊடகம் வாயிலாக நேற்று பேசிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்ததாவது, "நீங்கள் என்னை உங்கள் குடும்பத்தின் ஒருவராகக் கருதுகிறீர்கள்.

உங்கள் நலனுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். இந்தக் கட்டுப்பாடுகளை விதிக்க ஒரே காரணம் உயிர்களைக் காப்பாற்றுவதே. தயவுசெய்து இதைப் புரிந்துகொண்டு ஒத்துழைக்கவும்.

மத்திய அரசு உதவ வேண்டும்

மத்திய அரசு உதவ வேண்டும்
மத்திய அரசு உதவ வேண்டும்

கரோனா வைரசுக்கு எதிரான போர் மீண்டும் தொடங்கியுள்ளது, கோவிட் தொற்று அதிகரித்ததால் மகாராஷ்டிராவின் சுகாதார உள்கட்டமைப்பில் கடுமையான அழுத்தம் உள்ளது, மருத்துவ ஆக்ஸிஜன், மருத்துவமனை படுக்கைகளின் பற்றாக்குறை உள்ளது. மகாராஷ்டிராவில் ரெம்டெசிவிர் மருந்து தேவை அதிகரித்துள்ளது.

விமான படை விமானங்களைப் பயன்படுத்தி மாநிலத்தில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனை வழங்க மத்திய அரசு உதவ வேண்டும்.

அத்தியாவசிய தேவைக்கு அனுமதி

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிராவில் இன்று இரவு 8 மணிமுதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும். பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் மகாராஷ்டிராவில் 15 நாள்களுக்கு முழு முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

15 நாள்களுக்கு அனைத்து அலுவலகங்களும் மூடப்படும், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விலக்கு, அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியில் அனுமதிக்கப்படுவர்.

அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை காலை 7 முதல் இரவு 8 மணிவரை மட்டுமே நடைபெறும். பெட்ரோல் பங்குகள், கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.

மக்கள் வெளியே வரவேண்டாம்
மக்கள் வெளியே வர வேண்டாம்

மக்கள் வெளியே வர வேண்டாம்

இந்தத் தடை உத்தரவு ஏப்ரல் 14 முதல் 15 நாள்களுக்கு அமலில் இருக்கும். ரயில், பேருந்து சேவை தொடரும் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும், உணவகங்கள் மூடப்பட்டிருக்கும், இருப்பினும் ஹோம் டெலிவரிக்கு, பார்சல் வழங்க அனுமதி அளிக்கப்படும். தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள் மூடப்படும்.

அதன் பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம், மிகவும் அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்; மக்கள் வீடுகளிலிருந்து பணிகளை மேற்கொள்ளலாம், கரோனாவை ஒன்றாக எதிர்த்துப் போராடுவோம்" எனத் தெரிவித்தார்.

கோதுமை அரிசி இலவசம்
கோதுமை அரிசி இலவசம்

கோதுமை அரிசி இலவசம்

மேலும் அவர் கூறுகையில், "ஏழை மக்களுக்கு அடுத்த ஒரு மாதத்துக்கு மாநில அரசு மூன்று கிலோ கோதுமை, இரண்டு கிலோ அரிசி இலவசமாக வழங்கும்" எனக் கூறினார்.

நேற்று ஒரேநாளில் (ஏப். 13) மட்டும் புதிதாக 60 ஆயிரத்து 212 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.