ஜம்மு- காஷ்மீரில் 1990-களில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பண்டிட் குடும்பங்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவிட்டன. அந்த வகையில் பண்டிட்கள் தொடர்ந்து சுட்டுக்கொலை செய்யப்பட்டுருகின்றனர். அண்மையில் சோபியான் மாவட்டத்தின் செளத்ரிகண்ட் கிராமத்தில், அக்டோபர் 15ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பண்டிட் முதியவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதற்கு முன்னதாக அக்டோபர் 8ஆம் தேதி மோனிஷ் குமார் மற்றும் ராம் சாகர் ஆகியோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது கையெறிக் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த தொடர் தாக்குதல் சம்பவங்களினால், சோபியான் மாவட்டத்தில் இருக்கும் பெரும்பாலான பண்டிட்கள் இருப்பிடங்களை மாற்றிவருகின்றனர்.
அந்த வகையில் சோபியான் மாவட்டம் செளத்ரிகண்ட் கிராமத்தை விட்டு 10 பண்டிட் குடும்பங்கள் வெளியேறி ஜம்முவுக்கு சென்றுள்ளனர். தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதாலேயே இடம்பெயர்கிறோம் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொலை!