பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி திரும்பப் பெறப்பட்டார். இதையடுத்து, புதுச்சேரி ஆளுநர் பொறுப்பை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இன்று (பிப்.18) காலை தமிழிசை சவுந்தரராஜன், கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவியேற்க உள்ளார். இதற்காக நேற்று மாலை தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
வரவேற்பினை ஏற்றுக்கொண்ட தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது, "புதுச்சேரி மக்களை நான் நேசிக்கிறேன். புதுச்சேரி மக்களும் என்னை நேசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டதை அதிருஷ்டமாக கருதுகிறேன்.
மக்களுக்கான ஆளுநர் நான். சட்டவிதிகளுக்கு உட்பட்டு பொறுப்பில் செயல்படுவேன். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை" என்றார்.
இதையும் படிங்க: கரோனா டைம்ல பெட்ரோல் விலை ஏறுறது சகஜமப்பா - அளந்துவிட்ட எல். முருகன்