ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் பக்ரியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் விடுதியில், சர்தார்புராவை சேர்ந்த பட்டியலின மாணவர் தங்கி படித்து வருகிறார். அவர் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி பள்ளியில் சக மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததால், ஆசிரியர் பன்வர் சிங், மாணவரை தடியால் சரமாரிய அடித்துள்ளார்.
இதனால் மாணவருக்கு காயங்கள் ஏற்பட்டன. இதுகுறித்து மாணவர் தனது பெற்றோருக்கு தெரிவிக்கவே, குடும்பத்தார் ஆசிரியர் பன்வர் சிங் மீது பாக்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், பன்வர் சிங் கைது செய்யப்பட்டார். இதனிடையே மாவட்ட கல்வித்துறை, பன்வர் சிங்கை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இதையும் படிங்க: ஹேண்ட் ரைட்டிங் நல்லா இல்லா... 2ஆம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது...