புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், என்ஆர் காங்கிரஸ், பாஜக, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலர் அஸ்வின் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினர்களை வரவேற்று ஆளுநர் தமிழிசை பேசினார்.
அப்போது, "சட்டப்பேரவைக்கு புதிய ரத்தம் பாய்ச்சியது போல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். மக்களுக்கான அரசாக இது செயல்பட வேண்டும். புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும், அனைத்து திறனும் உடைய மாநிலமாக இருக்கிறது.
இதனை மிகச்சிறந்த மாநிலமாக மாற்ற இணைந்து பாடுபடவேண்டும். புதுச்சேரி சிறந்த மாநிலமாக உருவாக்குவதற்கு என்னுடைய ஒத்துழைப்பு என்றென்றும் இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: புதுச்சேரி மாநில புதிய சபாநாயகராக ஏம்பலம் செல்வம் பதவியேற்பு!