ETV Bharat / bharat

பிஸ்லரி வாட்டர் நிறுவனத்தை வாங்கும் டாடா குழுமம்..? - டாடா சன்ஸ்

தண்ணீர் பாட்டில் விற்பனையில் முன்னணியில் உள்ள பிஸ்லரி இண்டர்நேஷனல் நிறுவனத்தை சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிஸ்லரி - டாடா  சன்ஸ்
பிஸ்லரி - டாடா சன்ஸ்
author img

By

Published : Nov 24, 2022, 2:49 PM IST

டெல்லி: நாட்டின் மிகப் பெரிய மினரல் வாட்டர் விற்பனை நிறுவனமான பிஸ்லரியை ஏறத்தாழ 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா குழுமம் விலைக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இத்தாலியை பூர்வீகமாக கொண்ட பேக்கேஜ்ட் டிரிங்கிங் வாட்டர் நிறுவனமான பிஸ்லரி கடந்த 1965 ஆம் ஆண்டு இந்தியாவில் தன் விற்பனையை தொடங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு பின் பிஸ்லரியை, ரமேஷ் சவுகான் என்பவர் விலைக்கு வாங்கி பிஸ்லரி இண்டர்நேஷனல் என மாற்றம் செய்தார்.

அத்துடன் தம்ஸ் அப் (Thumps Up), கோல்ட் ஸ்பாட் (Gold Spot) லிம்கா (Limca)ம் மாஸா(Maaza) உள்ளிட்ட குளிர்பான பிராண்டுகளையும் விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 1993 ஆம் ஆண்டு தம்ஸ் அப், கோல்ட் ஸ்பாட் லிம்கா பிராண்டுகளை அமெரிக்காவை சேர்ந்த கோகோ கோலா நிறுவனம் விலைக்கு வாங்கியது.

வயது மூப்பு, மகள் ஜெயந்தி வியாபாரத்தில் அதிக அக்கறை காட்டாதது உள்ளிட்ட காரணங்களால் பிஸ்லரியை விற்க ரமேஷ் சவுகான் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. தம்ஸ் அப், லிம்கா பிராண்டுகள் விற்பனைக்கு பின் ஏறத்தாழ 30 ஆண்டுகள் கழித்து பிஸ்லரி நிறுவனத்தையும் விற்க ரமேஷ் சவுகான் முடிவெடுத்துள்ளார்.

தண்ணீர் பாட்டில் விற்பனை சந்தையில் கோலோச்சி வரும் பிஸ்லரியை விலைக்கு வாங்க அம்பானியின் ரிலையன்ஸ், நெஸ்லே (Nestle), டாடா குழுமம் இடையே கடும் போட்டி நிலவியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டாடா குழுமத்திடம் ஏறத்தாழ 7 ஆயிரம் கோடிக்கு பிஸ்லரியை விற்க ரமேஷ் சவுகான் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிஸ்லரி நிறுவனத்தை விற்கும் முடிவு வேதனைக்குரியது என தெரிவித்துள்ள சவுகான், டாடா குழுமம் பிஸ்லரி நிறுவனத்தை இன்னும் சிறப்பாக வளர்ச்சி அடைய வைப்பார்கள் என்றார்.

பிஸ்லரியை விற்பது குறித்து 2 ஆண்டுகளாக டாடா குழுமத்திடம் பேசி வருவதாகவும், சில மாதங்களுக்கு முன் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரனையும், டாடா நுகர்வோர் பொருட்கள் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் டிசோசா ஆகியோரை சந்தித்த போது டாடா-விடம் பிஸ்லெரியை விற்று விடலாம் என முடிவு செய்ததாகவும் ரமேஷ் சவுகான் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் சஸ்பெண்ட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.