ETV Bharat / bharat

Delhi ordinance row: டெல்லி அவசர சட்ட வழக்கை அரசியலமைப்பு அமர்வு விசாரிக்க பரிந்துரை? - டெல்லி அவசர சட்டம்

டெல்லி அவசர சட்ட வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு விசாரிக்க, நீதிபதிகள் பரிந்துரைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Supreme Court
Supreme Court
author img

By

Published : Jul 17, 2023, 7:46 PM IST

டெல்லி : டெல்லி அவசர சட்ட வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு விசாரிக்க, நீதிபதிகள் பரிந்துரைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலைநகர் டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடை மாற்றம் குறித்த அதிகாரம் துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசிடமே இருந்த நிலையில் அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு மாநில அரசின் ஆட்சி மற்றும் நிர்வாகத்தை நிர்வகிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது என்றும் அதிகாரிகள் நியமனம், நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மாற்றம் ஆகியவற்றில் டெல்லி அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று கூறி தீர்ப்பு அளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து டெல்லியில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளை இடமாற்றி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்க முதலமைச்சர், தலைமைச் செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் அடங்கிய தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைத்து அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த சட்டம் டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் இருப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துப் போகும் வகையில் இருப்பதாகவும் கூறி ஆம் ஆத்மி உச்ச நீதிமன்றத்தி மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பகுதி அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், மனுவை விசாரித்த நீதிபதிகள், சட்டப்பிரிவு 239ஏவின் கீழ் டெல்லி அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை அதன் எல்லைக்கு வெளியே எடுத்துச் செல்லும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டத்தை பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர். இந்த சட்டப் பிரிவை அனுமதிக்க முடியுமா என்பதை விசாரிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், மனுவை அரசியலமைப்பு அமர்வு விசாரிப்பது குறித்து சுட்டிக்காட்டினர்.

டெல்லி அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, இந்த விவகாரம் அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்பப்பட வேண்டிய அவசியமில்லை என்பது தொடர்பாக சமர்பிக்க கால அவகாசம் கோரினார். இதனிடையே ஆஜரான மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா, அவசர சட்டத்துக்கு பதிலாக வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு மசோதா ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அதற்கான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் நியமனம் மற்றும் அவசர சட்டத்திற்கு எதிராக மனு ஆகிய இரண்டு வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் விசாரித்த நிலையில், ஆஜரான துஷர் மேத்தா, நாடாளுமன்றத்தில் டெல்லி அவசர சட்டம் தொடர்பான மசோதா செயல்பாட்டிற்குப் பிறகு வேறு வடிவத்தில் அவசரச் சட்டம் இயற்றப்படலாம் என்று தெரிவித்தார். மேலும் அதுவரை விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரினார்.

இதையும் படிங்க : பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் 38 கட்சிகள் பங்கேற்பு - ஜே.பி. நட்டா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.