சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் 15ஆவது முதலமைச்சராக சுக்விந்தர் சிங் இன்று (டிசம்பர் 11) பதவியேற்றார். துணை முதலமைச்சராக முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்றார். இவர்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த விழா சிம்லாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ரிட்ஜ் மைதானத்தில் நடந்தது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சுக்விந்தர் சிங், நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிபெற்றவர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு நெருக்கமானவராகவும் கருதப்படுகிறார்.
இதையும் படிங்க: குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் சட்டப்பேரவை கட்சி தலைவராக தேர்வு