போபால்(மத்தியப் பிரதேசம்): இசையமைப்பாளரான பில்லி மெக்லாலினுக்கு, கடந்த 2001-ல் வலது கையில் ஏற்பட்ட தசை சுருக்கத்தினால் அவரது இசை நிகழ்ச்சியானது நடக்காமல் போன நிலையில், தனது இடது கையினால், கிட்டார் வாசித்து உலக சாதனைப் படைத்திருந்தார்.
இந்நிலையில் சிங்ராலி மாவட்டத்தில், புத்ஹேல்லா என்னும் கிராமத்தில் உள்ள ஒரு வீணா வாதினி பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி மாணவர்களுக்கு 'ஆதிக்கம் செலுத்தும் வலது கை' என்ற தலைப்பில் இரு கைகளாலும் திறமையானவர்களாக இருக்க ஒருவர் பயிற்சியளித்து வருகிறார். அவர், வீராங்கத் ஷர்மா.
அதன்படி, வீராங்கத் ஷர்மாவின் பள்ளியிலுள்ள 150 மாணவர்களும் ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் இரு கைகளாலும் எழுதும் தனித்துவமான திறனைப்பெற்றுள்ளது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
முன்னாள் இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவரான ராஜேந்திர பிரசாத் மீது பற்றுகொண்ட முன்னாள் ராணுவ வீரரான வீராங்கத் சர்மா என்பவரால் இப்பள்ளி நிறுவப்பட்டது. தனது ராணுவப் பயிற்சியை விட்டுவிட்டு மாணவர்களுக்கு இது மாதிரியான திறமைகளை கற்றுத்தருவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
பழமையான நாலந்தா பல்கலைக்கழக மாணவர்கள் சராசரியாக, ஒரு நாளைக்கு 32 ஆயிரம் வார்த்தைகளை எழுதியதாக இவர் கண்டுபிடித்த நிலையில், முதலில் இரு கைகளிலும் தான் எழுத முயன்றார். அதில் பெற்ற வெற்றியைத்தொடர்ந்து, பிற பள்ளி மாணவர்களுக்கும் இத்திறமையைக் கற்றுத் தர விரும்பியதன் விளைவாக 1999-ல் ஜூலை 8ஆம் தேதி ஒரு பள்ளியை நிறுவினார்.
இங்கு தொடர் பயிற்சி பெற்ற மாணவர்கள், சாதாரணமாக 11 மணிநேரத்தில் 24,000 வார்த்தைகள் வரை எழுதுகின்றனர். தியானம், உறுதிப்பாடு, யோகா உள்ளிட்டவைகளின் மூலமே இத்தகைய பயிற்சியை அடைய முடியும் என்கிறார், ஷர்மா. இதற்காக தினமும் சுமார் ஒருமணி நேரம் வரையில் தியானம், யோகா உள்ளிட்ட பயிற்சிகள் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் எழுதும் இத்தகைய ஆற்றல், மாணவர்களின் நினைவு சக்தியை அதிகரிக்கவும் மனக்கூர்மையை ஏற்படுத்தவும் குறிப்பாக நேரத்தை மிச்சப்படுத்தவும் செய்கிறது.
அதன்படி, இங்குள்ள மாணவர்கள் 45 வினாடிகளில், ஒன்று முதல் 100 வரையான எண்ணிக்கையில் உருது மொழியிலும், ரோமன் மொழியில் ஒரு நிமிடத்திலும், தேவநாகரி எழுத்தில் ஒரு நிமிடத்திலும் எழுதுகின்றனர். அத்துடன் மேலும், ஒரு நிமிடத்தில் 17 வார்த்தைகள் வரை எழுதுவதுடன், ஒரு நிமிடத்தில் இரண்டு மொழிகளில் இருந்து 250 வார்த்தைகளை மொழிபெயர்க்கவும் இயலும் என்கிறார்கள்.
இதுகுறித்து சிங்ராலி மாவட்ட மருத்துவமனையின் மனநல மருத்துவர் ஆஷிஷ் பாண்டே கூறுகையில், "நமது மூளை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மூளையின் இடது பக்கம் உடலின் வலது பக்கத்தையும், மூளையின் வலது பக்கம் உடலின் இடது பக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.
இந்த கோட்பாட்டின்படி, மக்கள் வலது (அ) இடது பக்கத்துடன் வேலை செய்கிறார்கள். ஆனால், 1 சதவீதம் பேர் தங்கள் இரு கைகளையும் ஒன்றாகக் கொண்டு வேலை செய்கிறார்கள். அவர்கள் அம்பிடெக்ஸ்ட்ரஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் இரு பகுதிகளும் ஒன்றாக வேலை செய்ய உருவாக்கப்பட்டு முழு மூளையின் மீதும் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன" என்றார்.
இவ்வாறு ஒரே நேரத்தில் இரு கைகளிலும் பல மொழிகளிலும் எழுதும் இத்தகைய சவால், 150 பள்ளி மாணவர்களையும் இதற்காக அவர்களை பயிற்றுவித்த வீராங்கத் ஷர்மா, அனைவரின் கவனத்தையும் உலகளவில் ஈர்த்துள்ளார்
இதையும் படிங்க: "ஜவஹர்லால் நேரு, ஜனநாயகத்தின் வெற்றியாளர்" - மல்லிகார்ஜுன கார்கே புகழாரம்!