ETV Bharat / bharat

ஒரு ஆண்டில் 355 நாட்கள் காவல் நிலையத்திலும் 10 நாட்கள் கோயிலிலும் வைக்கப்படும் விநோத விநாயகர் - பக்தர்கள் தரிசணத்திற்காக

பிகார் மாநிலம் நாளந்தாவில் பழமையான விநாயகர் சிலை ஒரு ஆண்டில் 355 நாட்கள் காவல் நிலையத்திலும் 10 நாட்கள் கோயிலிலும் வைக்கப்படுகிறது.

விநோத விநாயகர்: வருடத்தில் 355 நாட்கள் காவல் நிலையத்தில்... 10 நாட்கள் பூஜையில்

author img

By

Published : Sep 3, 2022, 9:10 AM IST

நாளந்தா: பிகார் மாநிலம் நாளந்தாவின் சிலாவ் பகுதியில் உள்ள கோயில் விநாயகர் சிலை ஒரு ஆண்டில் 355 நாட்கள் காவல் நிலைய வளாகத்திலும், 10 நாட்கள் கோயிலிலும் வைக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் 355 நாள்கள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்து விநாயகர் சதுர்த்திக்காக மீண்டும் கோயிலில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை போலீஸ் பாதுகாப்பில் வைக்க வேண்டிய காரணம குறித்து அந்த கோயிலின் பூசாரி பால் கோவிந்த் ராம் கூறுகையில், " இந்த விநாயகர் சிலை விலைமதிப்பற்ற பளிங்கு கற்களால் செய்யப்பட்டது. 150 ஆண்டுகள் பழமையானது. இதுபோல் வேறெங்கும் கிடையாது. ஒருமுறை இந்த சிலை திருடப்பட்டது.

ஆனால் பொதுமக்கள் திருடர்களை பிடித்துவிட்டனர். அதன்பின் சிலையை பாதுகாப்பாக வைக்க எண்ணினோம். சிலாவ் காவல்நிலைய வளாகத்தில் உள்ள கோயிலில் வைக்க திட்டமிட்டோம். அதன்படி விநாயகர் சிலை ஒரு ஆண்டில் 355 நாட்கள் அங்கும் 10 நாட்கள் கோயிலிலும் வைக்கப்பட்டு வருகிறது. இந்த 10 நாள்களும் விநாயகர் சதுர்த்தி வழிப்பாட்டுக்காக வைக்கப்படும். அதன்பின் மீண்டும் காவல்நிலைய வளாகத்தில் எடுத்து சென்று வைத்துவிடுவோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சாதியைக் காட்டி புறக்கணித்த கிராமம்; சாதித்துக்காட்டிய அங்கன்வாடி ஆசிரியை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.