புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றிபெற்றது. இதனையடுத்து முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றுக்கொண்டார். கூட்டணிக் கட்சியான பாஜகவிற்கு சபாநாயகர் பதவியும், இரண்டு அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக பாஜகவின் ஏம்பலம் செல்வம் பதவியேற்றார்.
புதிய சபாநாயகருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், இன்று (ஜூன் 22) புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில், சில சாமியார்கள் சிறப்பு பூஜை செய்து, சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை வாழ்த்தினர்.
புதுச்சேரி சபாநாயகர் அலுவலகத்தில், சாமியார்கள் பூஜை நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசியல் சதுரங்கத்தில் வல்லவர் ரங்கசாமி - ஜூன் 24 இல் பதவியேற்பு?