டெல்லி:Sonia Gandhi speaks with Baghel: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக பூபேஷ் பாகல் உள்ளார்.
இந்நிலையில் இன்று (ஜன.2) காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி முதலமைச்சர் பூபேஷ் பாகலுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மாநிலத்தில் எடுக்கப்பட்டு வரும் கரோனா மற்றும் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், கரோனா மூன்றாவது அலை பரவக் கூடுமானால், அதைச் சமாளிக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினார்.
மருத்துவமனையில் படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிதாக 279 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை இம்மாநிலத்தில் உருமாறிய கரோனா தொற்று ஒமைக்ரான் உறுதிசெய்யப்படவில்லை.
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 553 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிகிக்சைப் பலனின்றி 284 பேர் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒமைக்ரான் பரவல்.. மத்திய அமைச்சருடன் மா. சுப்பிரமணியன் ஆலோசனை!