ஜம்மு: பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை இரவு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் இந்திய வீரர் சுபேதார் ஸ்வந்திர சிங் (Swatantra Singh) படுகாயம் அடைந்தார். இந்நிலையில் அவர் வீரமரணத்தை தழுவினார்.
இந்தத் தகவலை ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் தேவேந்திர ஆனந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பூஞ்ச் மாவட்டத்தில் அத்துமீறி வியாழக்கிழமை (நவ.26) தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் சுபேதார் ஸ்வந்திர சிங் (Swatantra Singh) படுகாயமுற்று உயிரிழந்தார். ஸ்வந்திர சிங் (Swatantra Singh) வீரமிக்கவர். மிகுந்த உத்வேகம் கொண்டவர், நேர்மையான வீரர். அவரின் புனிதமிக்க பணிக்காகவும், உச்சப்பட்ச தியாகத்துக்காகவும் நாடு அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது” என்றார்.
சுபேதார் ஸ்வந்திர சிங் (Swatantra Singh) உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். பாகிஸ்தான் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'சீனாவை ஒருபோதும் நம்பமுடியாது' – மூத்த பத்திரிகையாளர் பிரேம் பிரகாஷ்