ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ராஜேந்திரநகரைச் சேர்ந்தவர் பகரி பிரவீன் (34). இவர் தொடர்ந்து பல ஆண்டுகளாக கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபட்டவந்த நிலையில் காவல் துறையினர் அவரை நேற்று (ஜூன் 22) கைது செய்துள்ளனர்.
இது குறித்து ராஜேந்திரநர் உதவி காவல் ஆணையர் கங்காதர், மைலார்தேவ்பள்ளி ஆய்வாளர் மது ஆகியோருடன் சேர்ந்து காவல் ஆணையர் ஜெகதீஷ்வர் ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: பெண் பயணியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ஓட்டுநர்.. பெங்களூருவில் நடந்தது என்ன?
கைது செய்யப்பட்டுள்ள பிரவீன் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையானவர். போதைப் பொருள் வாங்குவதற்காகவே இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த இருவரை கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு அவர்களிடம் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளார்.
அதேபோல், மைலார்தேவப்பள்ளி ஸ்வப்னா திரையங்கு அருகே தூங்கிக்கொண்டிருந்த 40 வயதுடைய மெத்தை வியாபாரியை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு பணத்துடன் தப்பிச் சென்றுள்ளார். இதேபோன்று, பணத்திற்காக பலரையுக் பிரவீன் கொலை செய்து வந்துள்ளார்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: Rashmika Mandanna: இப்போ அவர் என் கூட இல்ல.. நாங்க பிரிஞ்சிட்டோம்; ராஷ்மிகா மந்தானா ஓபன் டாக்!
தொடர்ந்து பேசிய அவர், "கைது செய்யப்பட்டுள்ள பிரவீன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜேந்திரநகர் காவல் நிலையப் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டு, நள்ளிரவில் மூவர் அந்த வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அப்போது, வீட்டின் இருந்த குடும்ப தலைவரை கல்லால் எறிந்து கொலை செய்தனர்.
மேலும், அவரது மனைவியை பாலியல் வன்புணர்வு செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். தொடர்ந்து அவர்களது 10 வயது மகனையும் கொலை செய்தனர். பின்னர், வீட்டில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆன்லைனில் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்; உத்தரபிரதேச இளைஞரை கைது செய்த ஹைதராபாத் போலீஸ்