ETV Bharat / bharat

ஹைதராபாத் வந்தடைந்த 2ஆவது பேட்ச் ஸ்புட்னிக் வி தடுப்பூசி

author img

By

Published : May 16, 2021, 2:57 PM IST

ரஷ்யா கண்டுபிடித்த ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இரண்டாவது கட்ட டோஸ் இன்று ஹைதராபாத் வந்தடைந்தது.

COVID-19 vaccine Sputnik
ஸ்புட்னிக் வி தடுப்பூசி

இந்தியாவில் ’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி கடந்த சில நாள்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்த வாரத்திலிருந்து சந்தையில் விற்பனைக்கு வருகிறது. ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை 995 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியை டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் இறக்குமதி செய்து வழங்கி வருகிறது.

ரஷ்யாவிலிருந்து ஏற்கனவே முதல்கட்டமாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் மே 1ஆம் தேதி இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2ஆவது கட்டமாக இன்று (மே.16) தனி விமானத்தில் ஹைதராபாத்திற்கு தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன.

இதுகுறித்து ரஷ்யத் தூதர் நிகோலே குதாஷேவ் கூறுகையில் “ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் செயல்திறன் உலக நாடுகள் அறிந்தது. கடந்த ஆண்டிலிருந்தே பல நாடுகள் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன. உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கு எதிராக இது சிறப்பாகச் செயல்படும் என ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத் வந்தடைந்த 2ஆவது பேட்ச் ஸ்புட்னிக் வி தடுப்பூசி

விரைவில் இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறோம். ஆண்டுக்கு 85 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க இருக்கிறோம். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியாவிடம் இருந்து இன்னும் கூடுதலாக ஒத்துழைப்பையும் கூட்டுறவையும் எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.

தற்போது இந்தியாவில் கரோனாவுக்கு எதிரான போரில் கோவாக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. மூன்றாவது மருந்தாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்தது. இந்த மருந்து பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், நாட்டில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாடு குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.