டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, கேரளாவைச் சேர்ந்த பிரவாசி சங்கம் என்ற சமூக நல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்க கோரிய பிற வழக்குகளுடன், இந்த வழக்கையும் சேர்க்க உத்தரவிட்டனர்.