டெல்லி: ரி பப்ளிக் ஆங்கில தொலைக்காட்சி தலைமை செய்தியாசிரியர் அர்னாப் கோஸ்வாமி நவம்பர் 4ஆம் தேதி மும்பை காவலர்களால் கைது செய்யப்பட்டார். 2018ஆம் ஆண்டு கட்டட வடிவமைப்பாளர் அன்வே நாயக் என்பவர் நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு ரூ.88 லட்சம் அர்னாப் கோஸ்வாமி கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கை மீண்டும் தூசி தட்டிய மும்பை காவல்துறையினர், அதிரடியாக ரி பப்ளிக் தலைமை செய்தியாசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்தனர். இந்நிலையில், “இவ்வழக்கில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, காவலர்கள் அத்துமீறி வீடு புகுந்து தன்னையும், தன்னை சேர்ந்தோரையும் (மனைவி, மகன், அத்தை, மாமனார்) தாக்கினார்கள். தனக்கு பிணை வழங்க வேண்டும் என அர்னாப் கோஸ்வாமி மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து அர்னாப் நவி மும்பையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்தபடி அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், “ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி-க்கு பிணை வழங்கி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமி-க்கு ஆதரவாக மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே, “சம்மந்தப்பட்ட வழக்கில் 2018ஆம் ஆண்டில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையும் முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் மறுவிசாரணை துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது” என்ற வாதத்தை முன்வைத்தார்.
இதற்கு அன்வே நாயக் தரப்பு வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அர்னாப் கோஸ்வாமி விவகாரம்; தாக்கரேவிடம் டெலிபோனில் பேசிய முதலமைச்சர்!