ETV Bharat / bharat

ஆந்திராவில் கோர விபத்து... உயிருடன் எரிந்து 4 பேர் உயிரிழப்பு... - காக்கிநாடா கன்டெய்னர் லாரி விபத்து

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் 2 லாரிகள் தீப்பிடித்து எரிந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

4 charred alive in Andhra'a Kakinada
4 charred alive in Andhra'a Kakinada
author img

By

Published : Dec 3, 2022, 5:13 PM IST

காக்கிநாடா: ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடாவின் தர்மாவரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 லாரிகள் தீப்பிடித்து எரிந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து காக்கிநாடா போலீசார் கூறுகையில், காக்கிநாடாவில் இருந்து மணல் லோடு ஏற்றிக்கொண்டு விசாகப்பட்டினத்தை நோக்கிப் புறப்பட்ட லாரி நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்து, தேசிய நெடுஞ்சாலையின் டிவைடரை கடந்து எதிரே வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. அப்போது, கன்டெய்னர் லாரியின் டீசல் டேங்க் வெடித்ததில், 2 லாரிகளிலும் தீ பிடித்தது.

இந்த விபத்தில், உத்தரப் பிரதேச மாநிலம் ஊஞ்சிட் கிராமத்தைச் சேர்ந்த கண்டெய்னர் டிரைவர் வினோத்குமார் யாதவ், பீமாவரம் மாவட்டம் யானைமதுரு கிராமத்தைச் சேர்ந்த கிளீனர் காளி பெத்திராஜூ (45), கிருஷ்ணா மாவட்டம் கோடூர் மண்டலம் பாடவாரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணல் லாரி டிரைவர் ஜன்னு ஸ்ரீனு (45), அவருடன் வந்த மற்றொருவர் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர். இதுகுறித்து வாகனவோட்டிகள் அளித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு படையினருடன் சம்பயிடத்திற்கு விரைந்து தீயை அணைத்தோம். அதன்பின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சொத்துக்காக கணவனுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்த மனைவி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.