ETV Bharat / bharat

கேரளாவில் ஆளுநர் - அரசு இடையே உச்சபட்ச மோதல்! அரசுக்கு எதிராக ஆளுநர் போர்க்கொடி! முதலமைச்சர் மத்திய அரசுக்கு எச்சரிக்கை! என்ன நடக்குது? - கேரளா ஆளுநர் அரசு இடையே மோதல்

கேரளாவில் ஆளுநரின் வாகனத்தை மறித்து எஸ்.எப்.ஐ மற்றும் டி.ஒய்.எப்.ஐ உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், தனக்கு வழங்கப்பட்ட கூடுதல் பாதுகாப்பை மறுத்த ஆளுநர் கடை வீதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 8:45 PM IST

கோழிக்கோடு : கேரளாவில் மாநில அரசுக்கும், ஆளுநர் ஆரிப் கானுக்கு ஏழாம் பொருத்தமாகவே காணப்படுகிறது. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிப் கான் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்து உள்ளதாகவும் அதில் 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளாகவும், 5 மசோதாக்கள் 1 ஆண்டாகவும் நிலுவையில் உள்ளன என்று கூறி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் அமைப்பான எஸ்.எப்.ஐ மற்றும் டி.ஒய்.எப்.ஐ அமைப்பு ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தி கல்லூரிகளில் போஸ்டர் ஒட்டினர். இந்த போஸ்டர்களை போலீசார் கிழித்து எறிந்த நிலையில் மீண்டும் அதே இடங்களில் ஒட்டப்பட்டு உள்ளன.

முதலமைச்சர் பினராயி விஜயனின் உத்தரவின் பேரில் மாநில காவல் துறையால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக ஆளுநர் ஆரிப் கான் குற்றம் சாட்டினார். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கோழிக்கோடு பல்கலைக்கழக துணை வேந்தர் விளக்கம் அளிக்கக் கோரி ஆளுநர் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற ஆளுநர் ஆரிப் கானின் காரை வழிமறித்து மாணவ அமைப்பினர் முற்றுகையிட்டனர். அப்போது கோபம் அடைந்த ஆளுநர் ஆரிப் கான், காரில் இருந்து கீழே இறங்கி மாணவர்களிடையே ஆவேசமாக பேசினார். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் ஆரிப் கானின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் ராஜ் பவனுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும், கேரள மாநில அரசு தனக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கவில்லை என்று ஆளுநர் ஆரிப் கான் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார். மேலும், மாநிலத்தில் காவல் துறையை செயல்படவிடாமல் முதலமைச்சர் தடுப்பதாகவும் மாநிலத்தில் அரசியலமைப்பு சீர்குலைந்து காணப்படுவதாகவும் டிஜிபிக்கு ஆளுநர் கடிதம் எழுதினார்.

தொடர்ந்து ஆளுநர்க்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், போலீஸ் பாதுகாப்பை மறுத்த ஆளுநர் ஆரிப் கான்ம் கோழிக்கோடு நகர வீதிகளில் பாதுகாப்பு அச்சுறுத்தலையும் மீறி நடைபயிற்சி மேற்கொண்டார். கோழிக்கோடு நகரின் முக்கிய வீதிகளில் நடைபயிற்சி மேற்கொண்ட ஆளுநர் ஆரிப் கான், பாதசாரிகள் மற்றும் நடைபாதை கடை உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம் கலந்துரையாடினார்.

தொடர்ந்து பிரபல மிட்டாய் கடையில் ஆளுநர் ஆரிப் கான் அல்வா வாங்கி அங்கும் ஊழியர்களிடம் உரையாடினார். ஆளுநர் ஆரிப் கான் கூடுதல் போலீஸ் பாதுகாப்பை மறுத்த போதிலும், அவர் நடைபயிற்சி மேற்கொண்ட சாலைகளில் சாதாரண உடையிலும், சீருடையிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து பேசிய கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையீட்டு ஆளுநரை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் மாநில மற்றும் மத்திய அரசு இடையிலான உறவு பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : "இனி நாடாளுமன்றம் அமைதியாக நடக்கும்.. அதுவும் பாஜக எம்.பிக்களை பொறுத்து தான்" - டி.ஆர் பாலு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.