மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் ரயில் நிலையத்தில் நேற்று(அக்.18) 21 வயதான கர்ப்பிணி ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்து தவறி விழுந்தார்.
இதனைக்கண்ட ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் கண்டேகர், மிக துரிதமாக செயல்பட்டு, கர்ப்பிணி தண்டவாளத்தில் விழாதபடி நடைமேடை பக்கம் இழுத்து காப்பாற்றினார்.
இந்த சம்பவம் சில நொடிகளில் நடந்து முடிந்தது. முதல்கட்ட தகவலில், அந்த கர்ப்பிணி கல்யாணில் இருந்து கோரக்பூருக்கு செல்லவிருந்த நிலையில், வேறு ரயிலில் ஏறியுள்ளார்.
அதனை உணர்ந்து இறங்க முயற்பட்டபோது, இந்த சம்பவம் நிழந்தது தெரியவந்தது. இதையடுத்து கர்ப்பிணி காயமின்றி கோரக்பூர் செல்லும் ரயிலில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்த, சிசிடிவி காட்சிகளை ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் சிவாஜி சுதர், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "ஓடும் ரயிலில் பயணிகள் ஏறவோ, இறங்கவோ வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதனிடையே, சமூக வலைதலங்களில், ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் கண்டேகரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிசிடிவி வெளியீடு: பாட்டி பேரனை லாவகமாக காப்பாற்றிய காவலர்!