ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள ரூர்கேலா உருக்காலையில் இன்று காலை 9.45 மணி அளவில் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நிலக்கரி ரசாயன துறையில் இந்த விஷவாயு(கார்பன் மோனாக்ஸைட்) கசிவு ஏற்பட்டதில், அங்கு பணிபுரிந்த 10 பேர் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள இஸ்பத் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீவிர பாதிப்புக்குள்ளான நான்கு பேர் இதுவரை உயிரிழந்ததாகவும் மீதமுள்ள ஆறு பேர் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக முதல்கட்ட விசாரணை நடைபெற்றுவருவதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வாட்ஸ்அப்பின் திருத்தப்பட்ட விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கைகளால் பறிபோகும் பயனர் பாதுகாப்பு!