மகாராஷ்டிரா அரசின் உள்துறை அமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனில் தேஷ்முக் உள்ளார். மும்பை காவல் ஆணையராக இருந்த பரம்வீர் சிங், 'உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மாதந்தோறும் நூறு கோடி ரூபாய் வசூல் செய்து தன்னிடம் கொடுக்கும்படி வற்புறுத்தியதாக' குற்றஞ்சாட்டி மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்று எழுதினார்.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் சார்பில் அழுத்தம் தரப்பட்டுவரும் நிலையில், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த மகாராஷ்டிரா அரசு முன்வந்துள்ளது. இதனை அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் காவல் ஆணையர் பரம்வீர் சிங் மும்பை உயர் நீதிமன்றத்தையும் அணுகியுள்ளார். அவரது முறையீடு தற்போது விசாரணையில் உள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் ஒரே நாளில் 62,714 பாதிப்பு