லக்னோ: நேபாளத்தில் நேற்று (ஜன.24) மதியம் 2.28 மணிக்கு 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. இதனையடுத்து இரவு 7 மணியளவில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் வாஷிர் ஹசங்காஞ்(Wazir Hasanganj) சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டடம் திடீரென சரிந்தது. இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்புத் துறையினர் ஆகியோர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினர்.
4 அடுக்குகள் கொண்ட இந்த கட்டடம் சரிந்து விழுந்ததில், கட்டட இடிபாடுகளுக்குள் 35 பேர் சிக்கியதாக டிஜிபி சவுஹன் தெரிவித்தார். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய நிலவரப்படி ஒரே அறைக்குள் 5 பேர் சிக்கியுள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தை உரசிய டெம்போ... பழிவாங்க இளைஞர்கள் செய்த காரியம்...?