புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்கள் வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளிக்காமல் மாநில வளர்ச்சியை தடுத்து வருவதாக குற்றஞ்சாட்டி புதுச்சேரி காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளான மதசார்பற்ற கூட்டணி சார்பில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.
அப்போது புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வாகார்க், ஆளுநர் மாளிகை தலைமைச் செயலகம், சட்டப்பேரவை, அரசு அலுவலகங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு போராட்டம் நடத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
மேலும், பாதுகாப்பு கருதி ஆளுநர் மாளிகை முதல் அரவிந்தர் ஆசிரமம் அருகே தலைமை செயலகம் செல்லும் சாலையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுடன், காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இது புதுச்சேரி மக்களிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆளுநர் கிரண் பேடி மாற்றப்பட்டு நேற்று (பிப்.18) புதிய ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து மக்களக்கு இடையூறாக இருந்த தடுப்புகள் அகற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டார். அதையடுத்து பாரதி பூங்கா, தபால் நிலையம், ஆளுநர் மாளிகையைச் சுற்றி போடபட்ட தடுப்புகள் அகற்றப்பட்டன. மத்திய பாதுகாப்பு படை விலக்கி கொள்ளபட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: காங்கிரஸ் ஆட்சியை தக்கவைப்பாரா நாராயணசாமி? பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவு!