இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவிட்-19 தடுப்பூசி திட்டம் அமலில் உள்ளது. நாடு முழுவதும் கோவாக்ஸின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
குழந்தைகளுக்கு நாளை முதல் பரிசோதனை
இந்நிலையில், 6-12 வயது சிறார்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசிகளை எய்ம்ஸ்(AIIMS) மருத்துவமனை நாளை முதல் பரிசோதிக்கவுள்ளது. ஏற்கனவே 12-18 வயதினருக்கான பரிசோதனை முடிவடைந்துள்ள நிலையில், இந்த புதிய மருத்துவ பரிசோதனை நாளை தொடங்குகிறது.
கோவிட்-19 மூன்றாம் அலை ஏற்படும்பட்சத்தில் அதன் தாக்கம் குழந்தைகளிடம் அதிகம் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதை தடுத்து நிறுத்த தடுப்பூசி உருவாக்கும் முன்னேற்பாட்டில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆம் ஆத்மி மூலம் குஜராத் விரைவில் மாற்றத்தை சந்திக்கும் - அரவிந்த் கெஜ்ரிவால்