ETV Bharat / bharat

மே - 21 ராஜிவ் காந்தியின் நினைவு நாள் - தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு நாள் இன்று (மே.21) அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு இந்திய அளவிலான முக்கியத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மே.21 ராஜீவ் காந்தியின் நினைவு நாள்!
மே.21 ராஜீவ் காந்தியின் நினைவு நாள்!
author img

By

Published : May 21, 2021, 5:06 PM IST

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு நாள் இன்று (மே.21) அனுசரிக்கப்படுகிறது. ராஜிவ் காந்திக்கு இந்திய அளவிலான முக்கியத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ராஜிவ் காந்தி 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறந்தார். 1981 பிப்ரவரியில், தனது சகோதரர் நின்று வெற்றிபெற்ற சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப்பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அரசியல் வாழ்வில் நுழைந்தார்.

1984ஆம் ஆண்டு, அவரது தாயும் அன்றைய பிரதமருமான இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர், 40 வயதிலேயே ராஜிவ் காந்தி பிரதமரானார். அவர் 1984 முதல் 1989 வரை இந்தியாவின் 7ஆவது பிரதமராகப் பதவி வகித்தார்.

இதன்மூலம் மிகவும் இளவயதில் பிரதமர் பதவியை ஏற்றவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆனார், ராஜிவ்.

இதற்கிடையே சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் பேச வந்த ராஜிவ் காந்தி, தற்கொலைப் படையால் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.

இந்நாளை கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக நாட்டுமக்கள் அனுசரிக்கின்றனர். இன்று ராஜிவ் காந்தியின் நினைவுநாளையொட்டி, முன்னாள் தலைவர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் ராஜிவ் காந்தியின் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தனது தந்தையின் நினைவுநாளை ஒட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், மகள் ப்ரியங்கா காந்தியும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தங்களது நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் 13 நக்சல்கள் சுட்டுக்கொலை... அதிரடி காட்டிய காவல் துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.