சோலாப்பூர்: மசூதிகளில் உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால், ஒவ்வொரு மசூதியின் அருகேயும் ஹனுமன் சாலிஜா பாடப்படும் என்று எச்சரிக்கை விடுத்த ராஜ் தாக்கரே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. ஒருபுறம் ராஜ் தாக்கரேவை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதற்கிடையில் ஆங்காங்கே சில இடங்களில் மசூதி அருகே ஹனுமன் சாலிஸா பாடியதாக ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் காளிசரண் மகாராஜ் சோலாப்பூர் அகோலாவில் உள்ள ஜகதம்மா கோயிலுக்கு வழிபாடு செய்ய வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று ராஜ் தாக்கரே உண்மையான ஆண்மையை காட்டியுள்ளார். அவருக்கு முழு ஆதரவு” என்றார்.
இதையும் படிங்க : மசூதி ஒலிபெருக்கி சப்தமாக ஒலிக்கும் வரை ஹனுமன் சாலிஸா பாடப்படும்- ராஜ் தாக்கரே!