ETV Bharat / bharat

பற்றாக்குறையைப் போக்கும் 'ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்' - news today

'ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்' என்று பிரபலமாக அறியப்படும் சரக்கு ரயில் சேவை 56 முழு டேங்கர்களில் 813 மெட்ரிக் திரவ மருத்துவ ஆக்சிஜனுடன் பயணத்திற்குத் தயாராக உள்ளது.

oxygen express
oxygen express
author img

By

Published : May 2, 2021, 12:26 PM IST

கரோனா தொற்று அதிகரித்துவரும் சூழ்நிலையில் நாடெங்கும் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்திய ரயில்வே தனது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் தேவைப்படும் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்துவருகிறது.

இது குறித்து ரயில்வே வாரியத்தின் தலைவர் சுனீத் சர்மா கூறுகையில், "ஆக்சிஜனை விரைவாகத் தேவைப்படும் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் வேலையை ரயில்வே செய்துவருகிறது.

ஏப்ரல் 22 முதல் 25ஆம் தேதிவரை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் நிறைவடைந்துவிட்டன. தற்போது 813 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனுடன் (எல்எம்ஓ) 56 முழு டேங்கர்களை கொண்டு தயார் நிலையில் உள்ளது.

உத்தரப் பிரதேசத்திற்கு 25, மகாராஷ்டிராவுக்கு 10, மத்தியப் பிரதேசத்திற்கு 12, ஹரியானாவுக்கு ஐந்து, டெல்லிக்கு நான்கு ஆக்சிஜன் டேங்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், ஆறு ஆக்சிஜன் டேங்கர்கள் டெல்லி, ஐந்து தெலங்கானா, மூன்று உத்தரப் பிரதேசம், இரண்டு மத்தியப் பிரதேசம், இரண்டு ஹரியானா செல்லும் வழியில் உள்ளன.

ஆக்சிஜன் தேவைப்படும் இடங்களில் குறைந்தபட்சம் தேவையான அளவு சென்றடைவதை ரயில்வே உறுதி செய்துவருகிறது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் பற்றாக்குறை இல்லாமல் நிறைவேற்றிவருகிறது" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.