ETV Bharat / bharat

காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் - ரயில்வே அமைச்சர் கூறிய விளக்கம்...?! - வந்தே பாரத் ரயில்

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், மூவர்ணக் கொடியினால் ஈர்க்கப்பட்டே ரயிலுக்கு காவி நிறம் கொடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Vande Bharat Express
வந்தே பாரத்
author img

By

Published : Jul 9, 2023, 1:04 PM IST

சென்னை: சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்பட்ட பல வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயிலின் நிறம் வெள்ளையாக இருந்து வந்த நிலையில், சோதனை முறையில் அதனை மாற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, 28வது வந்தே பாரத் ரயில் வெள்ளையிலிருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் இருந்தால், அதிகம் அழுக்காவதால் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று(ஜூலை 8) சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். காவி நிற வந்தே பாரத் ரயிலையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "நாட்டின் 28வது வந்தே பாரத் ரயில் காவி நிறத்தில் இருக்கும். மூவர்ணக் கொடியினால் ஈர்க்கப்பட்டு இந்த நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டவை. இந்தியாவில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இதனை வடிவமைத்துள்ளனர். வந்தே பாரத் ரயில்களில் Anti climbing device என்ற பாதுகாப்பு அம்சம் உள்பட பல புதிய மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்று கூறினார்.

வந்தே பாரத் ரயில் திட்டம்:

இந்தியாவில் ரயில்வே உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் முழுவதுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயில்கள் இயக்கப்படுகின்றன. முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த அதிவேக ரயில் சேவை நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் வந்தே பாரத் ரயில்களில் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. கடந்த 7ஆம் தேதி, கோரக்பூர் - லக்னோ மற்றும் ஜோத்பூர் - சபர்மதி ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க: வந்தே பாரத் உள்பட அனைத்து ரயில்களில் டிக்கெட் விலை குறைப்பு... ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.