ETV Bharat / bharat

மன்மோகன் சிங் உடல்நிலையை நேரில் விசாரித்த ராகுல் - Rahul Gandhi

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மன்மோகன் சிங் உடல்நிலையை ராகுல் காந்தி நேரில் சென்று விசாரித்தார்.

ராகுல்
ராகுல்
author img

By

Published : Oct 14, 2021, 10:34 PM IST

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து விசாரிக்க ராகுல் காந்தி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று (அக்.14) மாலை நேரில் சென்றார். மருத்துவமனையில் இருந்த மன்மோகன் சிங் மனைவி குருஷரன் கவுரிடம் ராகுல் காந்தி நலம் விசாரித்தார்.

மருத்துவமனை வளாகத்தில் சுமார் அரை மணிநேரம் இருந்த ராகுல் மன்மோகன் சிங்கிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடமும் உரையாடினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று(அக்.13) மாலை அனுமதிக்கப்பட்டர். இதய நோய் சிகிச்சைப் பிரிவில் அவர் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மன்மோகன் சிங் உடல்நிலையை விசாரித்த ராகுல்

89 வயதான மன்மோகன் சிங், 2004 முதல் 2014ஆம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்தார். மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வேண்டும் எனப் பிரதமர் மோடி வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: லக்கிம்பூர் வன்முறை - சம்பவயிடத்தில் அமைச்சர் மகன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.