பாட்னா: 'மோடி' என்ற பெயர் குறித்து அவதூறாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு விதித்தது. இது நாடெங்கும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் உட்பட பல தரப்பினருக்கும் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சூடு தணிவதற்குள், அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக பாராளுமன்ற செயலகம் செய்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களை ஆடிப்போக செய்தது.
இதனைத்தொடர்ந்து, நாடெங்கும் உள்ள அக்கட்சியினர் பல கட்டங்களாக போராட்டத்தில் இறங்கிய சம்பவம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த நிலையில், அவரை எம்.பி.க்களுக்கான அரசு வீட்டிலிருந்து காலி செய்யுமாறு சில தினங்களுக்கு முன்பு பாராளுமன்றச் செயலகம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட ராகுல்காந்தி, முறைப்படி அரசு இல்லத்தை விட்டு வெளியேறுவேன் எனக் கூறியிருந்தபடியே அங்கிருந்து வெளியேறினார்.
'மோடி' என்ற பெயர் விவகாரத்தில் அவதூறாகப் பேசியதாக பாட்னா மாநில பாஜக தலைவர் சுஷில் குமார் ராகுல் காந்திக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. இதனிடையே, நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மே மாதத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதையும் படிங்க: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுலுக்கு சிறை நிச்சயம் - சுப்பிரமணியன் சுவாமி!
இத்தகைய நிலையில், 'மோடி' என்ற பெயர் விவகாரம் தொடர்பாக, பாஜக தலைவர் சுஷில் குமார் மோடி, தனக்கு எதிராக தாக்கல் செய்த மோடி குடும்பப்பெயர் வழக்கில் தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் பாட்னா நீதிமன்றத்தில் கடந்த ஏப்.22-ல் மனு தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த ஏப்.12ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த நிலையில், ஏப்.25ஆம் தேதி (நாளை) நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிமன்றம் கூறியுள்ளது. இதனைத்தொடர்ந்து, இன்று (ஏப்.24) இந்த மனுவை விசாரித்த பாட்னா நீதிமன்றம் ஏப்.25-ல் பாட்னா உயர் நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ., எம்.பி.,-களுக்கான நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக உள்ளார்.
இதையும் படிங்க: "அடக்குமுறையால் எங்களை அடக்க முடியாது" - ராகுலுக்கு ஆதரவாக சீறிய கரூர் எம்.பி ஜோதிமணி!