ETV Bharat / bharat

2 ஆண்டு சிறை.. எம்.பி. பதவிக்கு ஆபத்தா? - disqualified from parliament law

பிரதமர் மோடி குறித்து சர்ச்சையாக பேசிய மக்களவை உறுப்பினர் ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிகிறது.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படும் அபாயம் உள்ளதா?

author img

By

Published : Mar 23, 2023, 5:19 PM IST

Updated : Mar 23, 2023, 5:51 PM IST

சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அதே ஆண்டில் ஏப்ரல் 13 அன்று கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவருக்கும் எப்படி ஒரே பெயராக இருக்க முடியும்?

எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற இணை பெயரோடு இருக்க முடியும்?” எனப் பேசினார். இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, மோடி குடும்பத்தாரின் சமூக மரியாதை மற்றும் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக வழக்குத் தொடர்ந்தார். இதற்கு ராகுல் காந்தி தரப்பில், கருத்து மற்றும் பேச்சுரிமையால் பேசப்பட்டது என வாதிடப்பட்டது.

இருப்பினும், இந்த வழக்கில் இன்று (மார்ச் 23) தீர்ப்பளித்த குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்ட நீதிமன்றம், ராகுல் காந்தியை குற்றவாளி என தீர்ப்பு அளித்தது. அது மட்டுமல்லாமல், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இருப்பினும், தண்டனை விதிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே ராகுல் காந்தி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை, இந்திய அரசியலில் புதிய விவாதத்தைக் கிளப்பி உள்ளது. முக்கியமாக பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், இந்த தண்டனை ராகுல் காந்தியின் அவமரியாதை மற்றும் அவதூறான கருத்துகளுக்கு கிடைத்ததாகவும், இந்த தண்டனையால் ராகுல் காந்தியின் அரசியல் பயணம் மிகவும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கருதுகின்றனர். அதேநேரம் பாஜகவை விமர்சிப்பவர்களை, சட்டத்தால் கட்டுப்படுத்த பாஜக முயற்சிப்பதாகவும் காங்கிரஸாரால் கருதப்படுகிறது.

மேலும், இது தொடர்பாக சட்ட வல்லுநர்கள் கூறுகையில், ''மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 8 (3) என்ற விதியின் கீழ், எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினராவது குற்றம் மற்றும் அதனோடு தொடர்புடைய 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் அவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படலாம். தற்போது ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரும் இந்த விதியின் கீழ் நாடாளுமன்ற அவையில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது. அதேநேரம், இந்தியத் தண்டனைச் சட்டம் 499 என்ற குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் ராகுல் காந்திக்கு 2ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது அரிதான ஒன்று'' எனத் தெரிவிக்கின்றனர்.

ஒருவேளை, ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அவர் வெற்றி பெற்ற தொகுதியான வயநாடு மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அங்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதேநேரம் ராகுல் காந்தியின் சட்டக்குழு கூறுகையில், “நாங்கள் இந்த வழக்கை உயர் நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்வோம்.

இந்த தண்டனைக்கு தடை விதிக்கவோ அல்லது நிறுத்தி வைக்கவோ மேல்முறையீடு செய்வோம். இது உயர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டால், நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்” எனக் கூறுகின்றனர். அதேநேரம் இந்த மேல்முறையீட்டை எந்தவொரு உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தால், அடுத்த 8 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தியால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர்" - அவதூறு பேச்சுக்காக ராகுலுக்கு சிறை

Last Updated : Mar 23, 2023, 5:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.