ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்தாண்டு நடைபெற்ற அணிவகுப்பில் இந்திய விமானப்படையின் அட்டவணையில் போர் விமானி பாவனா காந்த் பெயர் இடம்பெற்றது.
அதன் படி, இன்று நடைபெற்ற அணிவகுப்பில் கலந்து கொண்டு, விமானி பாவனா போர் விமானத்தை இயக்கினார். இந்திய வரலாற்றில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற முதல் பெண் போர் விமானி இவர் தான்.
இந்த அணிவகுப்பில் சுகோய் -30 ரக போர் விமானம், ரோஹினி ரக போர் விமானம் உள்ளிட்டவை பங்கேற்றன. கடந்த 2016ஆம் ஆண்டு முதல்முதலாக இந்திய விமானப் படையில் இணைந்த மூன்று பெண் விமானிகளில் பாவனா காந்த்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வீர மரணமடைந்த ராணுவ வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது