தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து, மத்திய அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
இதையும் படிங்க:கொடைக்கானலில் அதிகரித்த பெட்ரோல் விலை