புதுச்சேரி: புதுச்சேரியின் ஏனாம் பகுதியில் புலாசா மீன்கள் அதிகம் கிடைக்கும். ஆந்திர மாநில மக்கள், இந்த புலாசா மீன்களை விரும்பி வாங்குகிறார்கள். புலாசா மீன்களை, 'மீன்களின் ராஜா' என ஏனாம் மக்கள் அழைக்கின்றனர். இந்த மீன்கள் அதிக சுவை கொண்டவை என்பதால், அதிக விலைக்கு ஏலம் போகும்.
இந்த நிலையில், ஏனாமில் இன்று(ஆக.24) காலை புலாசா மீன்கள் ஏலம்விடப்பட்டன. அதில், 2 கிலோ எடை கொண்ட ஒரு புலாசா மீன் 19 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
இதையும் படிங்க:மீண்டும் மிரட்ட வரும் அவதார் படத்தின் முதல் பாகம்... ரிலீஸ் தேதி அறிவிப்பு