புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (ஆக. 12) பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக ஆளுநர் அலுவலகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், 'தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான பல்வேறு கருத்துக்கள் பிரதமருடன் விவாதிக்கப்பட்டன.
தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்கும் எனப் பிரதமர் உறுதியளித்தார். மேலும், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில மக்களின் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்தார்.
![பிரதமர் மோடியுடன் ஆளுநர் தமிழிசை சந்திப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-02-governor-met-pm-tn10044_12082021132612_1208f_1628754972_549.jpg)
கரோனா காலத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பல நல்ல திட்டங்களுக்கும் செய்த உதவிகளுக்கும், நேற்றைய தினம் கொண்டு வந்த பிற்படுத்தப்பட்டோர் அரசியலமைப்பு சட்ட திருத்தத்துக்கும் துணைநிலை ஆளுநர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், பிரதமர் அளித்த ஊக்கத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விருந்தளிக்கும் சோனியா காந்தி!