புதுச்சேரி: 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு, கரோனா தடுப்பூசி (கோவாக்சின்) செலுத்தும் பணியை முதலமைச்சர் ரங்கசாமி இன்று புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளியில் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ், சுகாதாரத்துறை இயக்குனர் Dr. ஸ்ரீராமுலு மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் 15 முதல் 18 வயது வரை உள்ள சுமார் 83 ஆயிரம் பேருக்கு பள்ளி மற்றும் கல்லூரி, அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இதையும் படிங்க: ஒமைக்ரான் பரவல் : நீதிமன்றத்தில் நேரடி விசாரணை ரத்து!