ETV Bharat / bharat

தேன் திரைப்படத்திற்கு விருது வழங்கும் முதலமைச்சர் - புதுச்சேரி திரைப்பட விழா

புதுவை அரசின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட தேன் திரைப்படத்திற்கு செப்டம்பர் 24ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி விருது வழங்குகிறார்.

puducherry-cm-gives-award-to-honey-movie-crew
தேன் திரைப்படத்திற்கு 24ஆம் தேதி விருது வழங்கும் முதலமைச்சர்
author img

By

Published : Sep 21, 2021, 8:25 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக 'தேன்' திரைப்படத்தை புதுச்சேரி அரசு தேர்வு செய்தது. இத்திரைப்படத்தை இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ளார். நாயகனாக தருண் குமார், நாயகியாக அபர்நிதி நடித்துள்ளனர்.

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம், மத்திய அரசு திரைப்பட விழா இயக்குநரகம் இணைந்து இந்திய பனோரமா திரைப்பட விழாவை புதுச்சேரியில் ஆண்டுதோறும் நடத்துகின்றன. இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா வருகிற 24ஆம் தேதி தொடங்குகிறது.

Puducherry cm gives award to honey movie crew
விழாவில் திரையிடப்படும் படங்கள்

இவ்விழாவின் தொடக்க நாளான்று தேன் திரைப்படம் திரையிடப்படுகிறது. மேலும், வங்கம், மலையாளம், தெலுங்கு மொழிப்படங்களுடன் புதுச்சேரி ஆலயம் சாங்கஸ் இஸ் கலையரங்கத்தில் திரையிடப்பட்டவுள்ளன.

புதுச்சேரி திரைப்பட விழா தொடங்கும் நாளான செப்டம்பர் 24ஆம் தேதி தேன் திரைப்படத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி விருது வழங்க இருக்கிறார்.

இதையும் படிங்க: 'தேன்' படத்திற்குக் கிடைத்த வரவேற்பு - மகிழ்ச்சியில் படக்குழு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.