புதுச்சேரி: நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம், தனியார் பங்களிப்பு திட்டத்தின் உதவியோடு புதுச்சேரியில் முதல் முதலாக ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள பொது நூலகத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி இன்று(நவ.01) தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலர்.அஷ்வனி குமார், நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் இயக்குனர் யுவராஜ் மாலிக், ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்கள் படிப்பதற்காக தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நூலகம் திறந்திருக்கும்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான தனிப்பிரிவு, சுகாதாரம், உடல்நலம், இலக்கியம் உள்ளிட்ட நூல்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகளில் இங்கு உள்ளன.
இதையும் படிங்க:பிறந்த தினமா? பெயர் வைத்த தினமா? - சீமான் கேள்வி