புதுச்சேரி 15ஆவது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெற்றது.
சட்டப்பேரவை கூடி வரும் மார்ச் 3ஆம் தேதியுடன் 6 மாதம் நிறைவடைய உள்ளது. அதற்கு முன்பாக சட்டசபை கூட்ட வேண்டும்.
இந்நிலையில், முதலமைச்சர் ஒப்புதலுடன் , வரும் 23ஆம் தேதி சட்டசபையை கூட்ட, துணை நிலை ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக அரசு துறைகளின் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு கட்டமாக புதுச்சேரி நிதித்துறை செயலர் பிரசாந்த் கோயல் 3 தினங்களுக்கு முன் டெல்லி சென்ற மத்திய நிதித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நெல்லையில் அதிமுக வேட்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு