ETV Bharat / bharat

உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கக்கோரி தர்ணா

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தொகையை வழங்காததால் தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை ஊழியர்கள் போராட்டம்

author img

By

Published : Dec 31, 2021, 10:18 AM IST

புதுச்சேரி: பொதுப்பணித்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக 1,300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வவுச்சர் அடிப்படையில் மாதம் 16 நாட்கள் வேலைக்கு ரூ.3,500 ஊதியம் பெற்று வந்தனர்.

மேலும், ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று மாதம் ரூ.10,000 ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் எனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

ஆனால் இதுதொடர்பான கோப்புக்கு அனுமதி அளிக்க தலைமைச் செயலர் தடை செய்வதாகவும் அதற்கு பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் உடந்தையாக இருப்பதாகக் கூறி நேற்று டிசம்பர் 30 ஆம் தேதி, 300க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

முற்றுகையிட்டு தர்ணா செய்த புதுச்சேரி பொதுப்பணித்துறை ஊழியர்கள்
புதுச்சேரி பொதுப்பணித்துறை ஊழியர்கள் தர்ணா

கண்டனம்

மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தலைமைச் செயலர் மற்றும் தலைமை பொறியாளருக்கு எதிராகக் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் கொள்ளைப்புறமாக 100க்கும் மேற்பட்ட ஆட்களை புதியதாக பணியமர்த்த முயற்சி செய்வதாகவும் மேலும் ஊழியர்களுக்கு உயர்த்தி அறிவிக்கப்பட்ட ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: சமநிலை தவறும் கோபம் எப்படியிருக்கும்?; எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் 'வலிமை'!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.