ETV Bharat / bharat

பிகாரில் 3,500 கி.மீ. நடைப்பயணம் - பிரசாந்த் கிஷோர் மாஸ்டர் பிளான் - capital Patna

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் இன்று பிகார் மாநிலத்தில் 3,500 கி.மீ நடைப்பயணகத்தை தொடங்கியிருக்கிறார்.

Etv Bharatபிரசாந்த் கிஷோரின் அடுத்த டார்கெட்! 3500 கி.மீ நடைபயணம்

author img

By

Published : Oct 2, 2022, 2:00 PM IST

பாட்னா: பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியில் செயல்பட்டவர். அக்கட்சியின் துணை தலைவராகவும் பணியாற்றினார். இருப்பினும் சில காரணங்களால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் தனியாக கட்சித் தொடங்கும் முடிவிலும் இருந்து வந்தார். இவரது சிறந்த அரசியல் வியூகம் பல மாநிலங்களின் வெற்றியடைந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வென்றதற்கு முக்கிய காரணம் பிரசாந்த் கிஷோர் என்று செய்திகள் உள்ளன.

இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் அவரது அடுத்த வியூகத்தை தொடங்கியுள்ளார். தேர்தல் வியூக அறிவுரைகளை சிறிது காலத்திற்கு ஒத்தி வைத்து விட்டு, பிகார் மாநிலம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். அந்த வகையில் பிகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் இருந்து இன்று (அக்-2) முதல் நடைப்பயணத்தை தொடங்கினார்.

  • देश के सबसे गरीब और पिछड़े राज्य #बिहार में व्यवस्था परिवर्तन का दृढ़ संकल्प

    पहला महत्वपूर्ण कदम - समाज की मदद से एक नयी और बेहतर राजनीतिक व्यवस्था बनाने के लिए अगले 12-15 महीनों में बिहार के शहरों, गाँवों और क़स्बों में 3500KM की पदयात्रा

    बेहतर और विकसित बिहार के लिए #जनसुराज

    — Prashant Kishor (@PrashantKishor) October 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஜன் சூரஜ் அபியான் யாத்திரை: இந்த 3,500 கி.மீ நடைபயணம் பல மாதங்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. பிகார் மாநிலத்தின் பல நகரங்கள், கிராமங்கள் என்று அனைத்து முக்கிய இடங்களுக்கும் சென்று மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள உள்ளார் கிஷோர்.

யாத்திரையின் மூன்று நோக்கங்கள்:

1. சமூகத்தின் உதவியுடன், அடிமட்ட மட்டத்தில் உள்ள சரியான நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஜனநாயக தளத்திற்கு கொண்டு வந்து அரசியல் அமைப்பை உருவாக்க முயற்சிப்பது.

2. உள்ளூர் பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வுக்கான சாத்தியக்கூறுகளை, சிறந்த முறையில் புரிந்து கொள்வது, அதன் அடிப்படையில் நகரங்கள் மற்றும் கிராமங்களின் முன்னுரிமைகளை பட்டியலிட்டு, அவற்றின் வளர்ச்சிக்கான வரைவை தயார் செய்வது.

3. பிகாரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு, விவசாயத் தொழில் மற்றும் சமூக நீதி போன்ற முக்கியமான விஷயங்களில் நிபுணர்களின் ஆலோசனைகளை எடுத்து, அடுத்த 15 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு ஆவணத்தை மக்களுக்காகத் தயார் செய்வது என்று கூறப்படுகிறது. இந்த யாத்திரையின் முடிவில் பிரசாந்த் கிஷோர் நேரடியாக அரசியலில் அடி எடுத்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:காந்தி ஜெயந்தி - தலைவர்கள் மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.