ETV Bharat / bharat

கேலி செய்த பூக்கடைத் தொழிலாளி கொலை: 4 மணி நேரத்தில் கொலையாளிகள் கைது - கேலி செய்த பூக்கடை தொழிலாளி கொலை

புதுச்சேரியில் உண்டியல் திருடன் என்று கேலி செய்ததால் கொலைசெய்தவரை நான்கு மணி நேரத்தில் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கேலி செய்த பூக்கடை தொழிலாளி கொலை- 4 மணி நேரத்தில் கொலையாளி கைது..

author img

By

Published : Feb 18, 2022, 2:49 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி பெரிய மார்க்கெட் பூக்கடையில் தங்கி வேலை செய்துவந்த காரைக்கால், திருநள்ளாரில் உள்ள பெரியார் நகரைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் அருளானந்த் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார்.

இது குறித்து கடையின் உரிமையாளர் காண்டீபம் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின்பேரில் பெரியகடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இந்த நிலையில் செய்தியாளரைச் சந்தித்த பெரியகடை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் தகவலை அளித்தார்.

கொலைசெய்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கத் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில் வைத்திக்குப்பம் பாலாஜி, பிள்ளை தோட்டம் பாலா (எ) சிவபாலன் ஆகிய இரண்டு பேர் சம்பவம் நடைபெற்ற நான்கு மணி நேரத்திற்குள்ளாகக் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில் யார் அதிகம் பூ கட்டுவது என்ற பிரச்சினை இருந்துவந்துள்ளது.

குடிபோதையில் தகராறு

இந்த நிலையில் கடையில் வேலைசெய்த மூன்று பேரும் இரவு மது அருந்தியபோது பாலாஜியைப் பார்த்து நீ உண்டியல் திருடன் என்று சொல்லி கேலி செய்ததாகக் கூறினர்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அருளானந்தத்தை பூ கட்ட பயன்படுத்தப்படும் நைலான் நூலால் கழுத்தை அறுத்தும், கத்தியால், மார்பு, வயிறு, உள்ளிட்ட பகுதிகளில் குத்தியும் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் வாக்குமூலத்தில் குற்றவாளிகள் இருவரும் தெரிவித்ததாகக் கூறினார்.

மார்க்கெட்டில் தொடரும் குற்றச்சம்பவங்கள்

இதனையடுத்து அவர்கள் கொலைக்குப் பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல்செய்ததாகவும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று பெரியகடை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் கூறினார்.

மேலும் பெரிய மார்க்கெட்டில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கக் கூடாது என்று நகராட்சியிடம் பரிந்துரைத்து உள்ளதாகவும் ஆய்வாளர் கண்ணன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பூக்கடை ஊழியர் வெட்டிக் கொலை - இருவர் தலைமறைவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.