சத்ரா(ஜார்கண்ட்): பஞ்சாயத்து தேர்தலுக்காக சத்ரா கல்லூரி வாக்குச்சாவடியில் நடக்க இயலாத தேர்தல் அலுவலரான தன் கணவனை மனைவி தன் தோல்பட்டையில் தூக்கி வந்துள்ளார். இயலாத நிலையிலும் தன் வேலைக்கு வந்த தேர்தல் அலுவலரையும் அவரது மனைவியின் வைராக்கியத்தையும் மக்கள் பாராட்டினர்.
இந்தத் தேர்தல் அலுவலரின் பெயர் மனோஜ் குமார், பஞ்சாயத்து தேர்தலுக்காக சத்ரா கல்லூரி வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சில நாட்கள் முன்பு நடந்த ஒரு விபத்தில் காயமடைந்துள்ளார் மனோஜ் குமார். இதனால் நடக்கமுடியாமலும் இருந்துள்ளார். இதற்கிடையில் தேர்தல் அலுவலராக மனோஜ்குமார் நியமிக்கப்பட்டதால் அதை தவிர்க்கவும் மனோஜ் குமாருக்கு மனம் இடம் தரவில்லை.
ஆனால், நடக்க இயலாமல் எப்படி வாக்குச்சாவடிக்கு செல்வதென்ற கேள்வி மனோஜிற்கு எழுந்த நிலையில், ’கவலை வேண்டாம்..!’ என தன் கணவனை ஊக்கப்படுத்திய மனைவி தன் தோல்பட்டையில் கணவனைத் தூக்கிக் கொண்டு வாக்குச்சாவடி வரை நடந்து வந்துள்ளார். அதன்பின், மனோஜின் இந்த நிலையைக் கண்ட உயர் தேர்தல் அலுவலர்கள் அவரை வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு கூறி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: அமீரகத்தின் புதிய அதிபர் ஷேக் முகம்மது பின் ஸாயித் அல் நஹ்யான்!