புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் விரிவுப் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர் புதுச்சேரி பெரிகடை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிவந்தார்.
இந்நிலையில் சதாசிவம் தீபாவளி பண்டிகை காலத்தில் அதிக நேரம் பணியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சக ஊழியர்களிடம் தெரிவித்திருந்த நிலையில் இன்று (நவ.16) வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சதாசிவத்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சதாசிவம் பணிச்சுமையின் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை!