ETV Bharat / bharat

நாடு முழுவதும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளைத் தொடங்கிவைத்த பிரதமர்

பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள 35 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

நாடு முழுவதும் பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை தொடங்கி வைத்த பிரதமர்

author img

By

Published : Oct 7, 2021, 2:13 PM IST

கரோனா பெருந்தொற்றின் மத்தியில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில், ஒன்றிய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

35 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்

அதன் ஒரு பகுதியாக, பிஎம் கேர்ஸ் நிதியத்தின்கீழ் நாட்டின் 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள 35 பிரஷர் ஸ்விங் அட்ஸார்ப்ஷன் (PSA) ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 7) தொடங்கிவைத்தார்.

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அம்மாநில ஆளுநர் குர்மீத் சிங், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் டாமி, ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இது குறித்து நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் செயல்பட உள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், 1200-க்கும் மேற்பட்ட ஆலைகள்

இதுவரை, நாடு முழுவதும் பிஎம் கேர்ஸ் நிதியத்தின்கீழ் மொத்தம் ஆயிரத்து 224 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளுக்கு நிதியளிக்கப்பட்டுள்ளது, அவற்றில் ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் ஏற்கெவே இயக்கப்பட்டுவருகின்றன. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 750 எம்டிக்கும் அதிகமான ஆக்சிஜன் தயாரிக்கப்படுகிறது.

7,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு இந்த ஆலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டும், ஆலைகளின் செயல்பாடுகள், பராமரிப்பு உறுதிசெய்யப்பட்டும்வருகிறது. ஒருங்கிணைந்த இணைய தளம் மூலம் இந்த ஆலைகளின் செயல்திறன் நிகழ்நேர கண்காணிப்பில் ( real-time monitoring) உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: லக்கிம்பூர் வன்முறை; யார் யார் குற்றவாளிகள்? உச்ச நீதிமன்றம் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.